close
Choose your channels

இயக்குனர் மகேந்திரன் உடலுக்கு இளையராஜா நேரில் அஞ்சலி!

Tuesday, April 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானதை அடுத்து ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகமும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றது. மகேந்திரன் உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது பள்ளிக்கரணை வீட்டிற்கு திரையுலகினர் நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மகேந்திரன் உடலுக்கு இசைஞானி இளையராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார். மகேந்திரன் குடும்பத்தினர்களுக்கு அவர் ஆறுதலும் கூறினார்.

மகேந்திரன் இயக்கிய 'சாசனம்' என்ற படம் தவிர மீது அனைத்து படங்களுக்கும் இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, கை கொடுக்கும் கை போன்ற படங்களில் இசைஞானி கம்போஸ் செய்த பாடல்களும், அவரது பின்னணி இசையும் இந்த படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos