close
Choose your channels

இளையதளபதி 'பைரவா'வின் ஒருசில ரகசியங்கள்

Friday, September 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இதுவரை வெளிவராத ஒருசில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இளையதளபதியின் ரசிகர்களுக்காக அந்த தகவல்களை தற்போது பகிர்ந்து கொள்கிறோம்.
'பைரவா' படத்தின் கதை கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றின் அடிப்படையாக கொண்டது.
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை பாப்ரிகோஷ் நடிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பரிந்துரை செய்தாராம்
எந்த காரணத்தை முன்னிட்டும் பஞ்ச் டயலாக் இந்த படத்திற்கு வேண்டாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு வசனமும் பவர்புல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் பரதனிடம் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிராமத்து இளைஞர் மற்றும் மெடிக்கல் கல்லூரி மாணவர் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் விஜய் நடித்துள்ளார்
மற்ற படங்களை போலவே விஜய் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடவுள்ளார். இந்த பாடல் விரைவில் ஒலிப்பதிவு செய்யப்பட இருக்கின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் நடித்த கோபி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.