close
Choose your channels

நேற்று முதல் தொடங்கிய 'இந்தியன் 2' படப்பிடிப்பு: கமல், காஜகல் கலந்து கொள்வது எப்போது?

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்படம் ’இந்தியன் 2’ . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து புத்துணர்ச்சியுடன் நேற்று முதல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

நேற்று நடைபெற்ற பூஜையில் இயக்குனர் ஷங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் நேற்றைய முதல் நாள் படப்பிடிப்பில் பாபிசிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் கலந்து கொண்டதாகவும், இந்தக் காட்சிகளின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கமலஹாசன் செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்துகொள்வார் என்றும் அதேபோல் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் ஆகியோர்களும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60 சதவீதம் முடிந்துள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்த படத்தையும் முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.