close
Choose your channels

காங்கிரஸ் கட்சியில் இணைந்த 'இந்தியன்' பட நடிகை!

Wednesday, March 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'இந்தியன்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த நிலையில் 'இந்தியன்' திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ஊர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைத்த ஊர்மிளா, கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றுகொண்டார்.

மேலும் மும்பை வடக்கு மக்களவை தொகுதியில் நடிகை ஊர்மிளாவை நிறுத்த காங்கிரஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நேற்று பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணைந்து உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மற்றொரு பாலிவுட் நடிகையான ஊர்மிளா, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.