close
Choose your channels

சிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்!

Thursday, September 23, 2021 • தமிழ் Sport News Comments

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் 32 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு இடையே சிஎஸ்கே அணி எப்போதும் கெத்துக்காட்டி வருவதும் அவர்களைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.

அந்த வகையில் சிஎஸ்கே வீரர்களுடன் அவர்களது வாழ்க்கைத் துணைவியர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

1.சிஎஸ்கேவின் ஆஸ்தான நாயகன் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவர் சாக்ஷியை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு “ஷிவா“ என்ற பெண் குழந்தை இருப்பதும் கடந்த ஜுலை மாதம் இந்தத் தம்பதி தங்களின் 11 ஆவது திருமண விழாவை கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வுப் பெற்றிருந்தாலும் பல வெற்றிக் கோப்பைகளைப் பெற்ற இந்தியக் கேப்டனாக மதிக்கப்படுவதோடு தொடர்ந்து சிஎஸ்கேவின் கேப்டனாக வலம் வருகிறார்.

2.தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டூ பிளசிஸ் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வருகிறார். இவர் இம்ரி விஷிர் என்பவரை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

3.மொயின் அலி- இங்கிலாந்து வீரரான இவர் சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இவர் தனது 21 ஆவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக பத்திரிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பங்களாதேஷை சேர்ந்த Firoza Hossain என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு Abu Bakr Ali என்கிற மகனும் Haadiya என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

4. ரவீந்திர ஜடேஜா- இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான இவர் சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்த ரிவா சோலங்கி என்பவரை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு “நித்யனா” என்ற மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

5.சுரேஷ் ரெய்னா- சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரரான இவரை ரசிகர்கள் “சின்ன தல“ என்று ஆசையோடு அழைக்கின்றனர். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணியில் ரெய்னா முக்கியப் பங்காற்றி வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரியங்கா சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு “கிரேஸியா ரெய்னா“ என்ற மகள் உள்ளார் என்பதும் தனது மகளின் பெயரில் பிரியங்கா பவுண்டேஷன் ஒன்றை தொடங்கி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

6.அம்பதி ராயுடு- செகந்திராபாத்தைச் சேர்ந்த இவர் தனது கல்லூரி தோழியான செனுபலி வித்யா என்பவரைக் காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

7.ராபின் உத்தப்பா- ராஜஸ்தான் அணியில் ஆடிவந்த ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே சமீபத்தில் டிரேடிங் முறையில் ஏலம் எடுத்துள்ளது. இவர் தன்னுடைய தோழியான ஷீதல் கவுதமை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஷீதல் முன்னாள் டென்னிஸ் வீராங்களை என்பதும் குறிப்பிடத்தக்கது.

8.செதேஷ்வர் புஜாரா- பூஜா பாபரி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு “அதிதி“ என்ற மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz