close
Choose your channels

தன்னுடைய படத்தை ரீரிலீஸ் செய்ய கோரிக்கை விடும் சோனியா அகர்வால்.. செல்வராகவன் மனது வைப்பாரா?

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் தன்னுடைய படத்தையும் செய்ய வேண்டும் என சோனியா அகர்வால் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அந்த கோரிக்கையை அந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் மனது வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான ’7ஜி ரெயின்போ காலனி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான இந்த படம் இரு மொழிகளிலும் வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இந்த படத்தின் நாயகி சோனியா அகர்வால் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். சோனியா அகர்வாலின் இந்த கோரிக்கையை இயக்குனர் செல்வராகவன் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை திருமணம் செய்த செல்வராகவன், அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.