ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ஒரே நேரத்தில் ஏ.எல்விஜய் ’தலைவி’ என்ற பெயரிலும் பிரியதர்ஷினி என்ற இயக்குனர் ‘தி அயர்ன் லேடி’என்ற பெயரிலும் திரைப்படங்களாக உருவாக்கி வரும் நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘குவீன்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஆக இயக்கி வருகிறார். இவருடன் இந்த தொடரை ‘கிடாரி’ இயக்குனர் பிரசாத் முருகேசன் என்பவரும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த தொடரில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் ரம்யாகிருஷ்ணன் இந்த தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளீயிட்டுள்ளார்.. மக்கள் முன்னிலையில் மேடையில் ஜெயலலிதா பேசும் வகையில் உள்ள இந்த போஸ்டரால் இந்த தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும் சோபன்பாபுவாக வம்சி கிருஷ்ணாவும், எம்.ஜி.ஆராக இந்திரஜித்தும் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் வெகுவிரைவில் இந்த சீரிஸ் ரிலீஸ் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.