close
Choose your channels

அஜித் படத்தை உறுதி செய்த காஜல் அகர்வால்

Friday, July 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் முதல் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது என்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தின் டெக்னிக்கல் டீம் ஏற்கனவே பல்கேரியாவுக்கு சென்றுவிட்டனர்.
அஜித் உள்பட இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பல்கேரியாவுக்கு கிளம்பவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதை சமீபத்தில் காஜல் அகர்வால் உறுதி செய்துள்ளார்.
மேலும் அஜித் படத்தில் நடிப்பதற்காக விக்ரம்' நடிக்கும் 'கருடா' படத்தில் இருந்து விலகியதாக வெளிவந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். கவலை வேண்டாம்' படத்திற்கு பின்னர் அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அஜித் படத்தில் தனக்கு மிகவும் வித்தியாசமான கேரக்டர் என்றும் அவர் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.