close
Choose your channels

'காக்க காக்க' படம் பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது: விக்னேஷ் சிவன்

Friday, January 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடித்த 'தானா  சேர்ந்த கூட்டம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் விக்னேஷ்சிவன் கூறியதாவது:

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன் , கமல் ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்' என்று கூறினார்.

இதே விழாவில் தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசியதாவது :- தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா , விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன். தானா சேர்ந்த கூட்டம், ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பை போடாமல்  சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் பிரெஷானா சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.