close
Choose your channels

ரஜினிகாந்த் மாறவே இல்லை: கலைஞானம்

Tuesday, October 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை முதன் முதலாக ஹீரோவாக்கி அழகு பார்த்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கலைஞானம் அவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்து நேற்று அந்த வீட்டை திறந்து வைத்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது வீடு கொடுத்த ரஜினிகாந்த் குறித்து கலைஞானம் பேட்டியில் கூறியதாவது: பல வீடுகள் பார்த்து, இருக்கும் வீடுகளில் எது நல்ல வீடு என்று ஆராய்ந்து அந்த வீட்டை எனக்கு வாங்கி கொடுத்துள்ளார். நான் நினைத்த மாதிரியே வீடு வாங்கி அந்த வீட்டிற்கு அவரே வந்து அவர் விளக்கேற்றியும் வைத்துள்ளார்.

’பைரவி’ படத்தில் நடிக்கும்போது எப்படி நான் பார்த்த ரஜினி எப்படி இருந்தாரோ, அதே போலதான் தற்போதும் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாமல் தான் அன்றும் இருந்தார், இன்றும் இருக்கின்றார். தான் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கின்றோம் என்ற கர்வம் அவருக்கு சிறிதும் கிடையாது.

பைரவி படத்தின் படப்பிடிப்பின்போது ஷாட் முடிந்ததும் தரையில் படுத்து விடுவார். அதே போல் தான் இன்றும் எளிமையாக இருக்கிறார். வீட்டிலும் அவர் ஒரு சாதாரண காவி வேட்டியுடன் தான் உள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் கட்டாயத்தின் பேரிலேயே அரசியலுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ரஜினிகாந்த்தை நிச்சயம் நிறைவேற்றுவார்’ என்று கலைஞானம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.