close
Choose your channels

மாடுபிடி வீரர்களுடன் சூர்யா எடுத்த பயிற்சி: கலைப்புலி தாணு வெளியிட்ட மாஸ் வீடியோ!

Saturday, July 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக ’வாடிவாசல்’ படத்தில் சூர்யா மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிடுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வாடிவாசல்’ படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்த சூர்யாவின் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்திற்கான பயிற்சி படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது. இந்த படப்பிடிப்பில் சூர்யா மூக்கணாங்கயிறு அவிழ்க்கப்பட்டவுடன் வெளிவரும் காளைக்காக காத்திருப்பது, ஆக்ரோஷமாக முட்டவரும் காளையை சூர்யா எதிர்கொள்வது போன்ற காட்சிகள் உள்ளன. சூர்யா இந்த காட்சிகளில் தத்ரூபமாக நடித்துள்ள வீடியோவை பார்க்கும் போது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கலைபுலி எஸ் தாணு அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் தனித்துவமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய விருது பெற்ற சூர்யா, ஜீவி பிரகாஷ் ஆகியோர்களுக்கு மேலும் தேசிய விருதுகளை பெற்றுத்தரும் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.