close
Choose your channels

'இந்தியன் 2' படப்பிடிப்பு: கமல், காஜல் அகர்வால் கலந்து கொள்வது எப்போது?

Sunday, September 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்ற பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அதில் சில முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அடுத்த கட்டமாக இயக்குனர் ஷங்கர் ’ஆர்.சி 15’ படத்தின் படப்பிடிப்பில் நாளை முதல் கலந்து கொள்ள உள்ளார்.

ஒரு வாரம் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் இயக்குனர் ஷங்கர் மீண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.