முதுகெலும்பு இல்லாதவர் என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தின் மூலம் சொற்போர் நடந்து வருவதை அனைவரும் கவனித்து கொண்டுதான் வருகின்றனர்.
ஏற்கனவே கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது, 'முதல்வர் ஓபிஎஸ் போராட்டக்காரர்களை நேரில் சந்திக்க வேண்டும்' என்று கூறிய கருத்துக்கு 'இது முட்டாள்தனமான கருத்து' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதும் அதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்ததையும் பார்த்தோம்.
இந்நிலையில் தற்போது சுப்பிரமணியன் சுவாமி கமல் குறித்து கூறியபோது, 'கமல்ஹாசன் முதுகெலும்பு இல்லாதவர் போல் கருத்து கூறுவதாக கூறியிருந்தார். இந்த கருத்துக்கு தனது சமூக வலைத்தளத்தில் பதில் கூறியுள்ள கமல்ஹாசன், 'கருத்து தெரிவிக்கும் வகையில் ஒரு எலும்பு எனக்கு உள்ளது. அதுவே போதுமானதாகும். சுப்ரமணியன் சாமி தமிழர்களை பொறுக்கிகள் என அழைத்து வருகிறார். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவசியமில்லை. மக்கள் பார்த்துக் கொள்வார்கள்' என பதிலடி கொடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.