close
Choose your channels

அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது: கமல்ஹாசன்

Tuesday, May 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு கட்ட ஊரடங்கை கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றி கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஒன்றரை மாதங்களாக வேலைக்கு செல்லாமல், வருமானம் இல்லாமல் அரசின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து பெரும்பாலானோர் நடந்து கொண்டனர். அதேபோல் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், துப்புரவு துறையினர் ஆகியோர் தன்னலம் கருதாது பணி செய்து கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். இவர்களில் சிலர் உயிர்த்தியாகமும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களும் டாக்டர்களும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் வீணாகும் வகையில் நேற்று மதுக்கடைகளை திறந்துவிட்டதால் விபரீதமாகியுள்ளது. மதுக்கடைகளில் சமூக விலகலை காற்றில் பறக்கவிட்டு கொரோனா வைரஸ் பயமின்றி மதுபாட்டில்களை வாங்க மக்கள் முண்டியத்தனர். இதில் மதுபாட்டில்களை வாங்கும் மக்களை குற்றம் சொல்வதா? இந்த இக்கட்டான நேரத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த அரசை குற்றம் சொல்வதா? என தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தற்போது தமிழக அரசும் எடுத்துள்ளதற்கு உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது: கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு’ என்று பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.