close
Choose your channels

தமிழ் நடிகையின் பிறந்த நாளில் கேக் ஊட்டிவிட்ட கபில்தேவ்: வைரல் வீடியோ  

Sunday, March 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் நடிகைக்கு கேக் ஊட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் ‘அழகன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, மணிரத்னம் இயக்கிய ’ரோஜா’, ஷங்கரின் ‘ஜெண்டிமேன்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மதுபாலா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது சமந்தாவின் ’சாகுந்தலம்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடிகை மதுபாலா தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவருக்கு பல பிரபலங்கள் நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நடிகை மதுபாலாவுக்கு கேக் ஊட்டிய வீடியோ, மதுபாலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.