close
Choose your channels

இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி!

Thursday, August 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார் என்பதும் அவரது படங்கள் இதனால் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ராஜூமுருகன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தியை இந்த படத்தில் நடிக்க வைக்க ராஜூமுருகன் திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான ஒத்திகை பயிற்சிகளில் கார்த்தி ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத்தேவன் என்ற கேரக்டரில் நடித்துள்ள கார்த்தி இந்த படத்தில் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்ததற்காக படக்குழுவினர்களின் பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.