சினிமாவுக்கு வந்த 'கார்த்திகை தீபம்' நடிகை.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பலர் வெள்ளித்திரையிலும் நடித்து வருகின்றனர் என்பதும் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ’கார்த்திகை தீபம் ’சீரியலில் நடித்து பிரபலமான ஆர்த்திகா என்ற நடிகை தற்போது ’வா பகண்டையா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய தினேஷ் என்பவர் ஹீரோவாகவும், ஆர்த்திகா ஹீரோயினியாக நடித்திருக்கும் இந்த படத்தில் அஜித் கோலி, யோகிராம் ,ஆர் சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணா, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பி ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் எஸ்ஏ ராஜ்குமார் இசையமைக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.