close
Choose your channels

விஸ்வாசம் படம் குறித்து இயக்குனர் கரு.பழனியப்பனின் கருத்து !

Friday, January 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்த்திபன் கனவு , சிவப்பதிகாரம் , சதுரங்கம் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் கரு.பழனியப்பன் தற்போது 'புகழேந்தி என்னும் நான்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது சில சினிமா பற்றிய விமர்சனங்களையும் அரசியல் பற்றிய விமர்சனங்களையும் கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அஜித்தின் விஸ்வாசம் படம் குறித்த ஒரு விமர்சனத்தை கூறியுள்ளார்.

இந்த காலத்தில் வெளியாகும் படங்களில் பேமிலி ஆடியன்ஸ் படங்களே வெற்றி பெறுகின்றன என்றும் இதற்கு விஸ்வாசம் தான் சிறந்த லேட்டஸ்ட் உதாரணம் என்றும் ' விஸ்வாசம் ' படத்தை பாராட்டியுள்ளார் கரு.பழனியப்பன். கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் 'விஸ்வாசம்' படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் தற்போது நல்ல வசூலை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வாசம் படம் குறித்து கரு.பழனியப்பனும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.