close
Choose your channels

காமெடி நடிகர் கருணாஸ் காட்டிய விஸ்வாசம்

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த சில வருடங்களில் அணிகள் மாறி மாறி ஆதரவை தந்து கொண்டிருந்தார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அதிமுகவின் விசுவாசியாகவும், அவரது மறைவிற்கு பின் சசிகலா ஆதரவாளாகவும், அதன்பின் தினகரன் ஆதரவாளராகவும், திடீரென திமுக ஆதரவாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில் சமீபகாலமாக அவர் அதிமுகவுக்கு நெருக்கமாக உள்ளார். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய கருணாஸ், 'ஜெயலலிதா ஆசியால்தான் தான் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டதாகவும், அந்த விஸ்வாசத்திற்காக அதிமுகவின் ஐந்து ஆண்டு முழு ஆட்சிக்காலம் வரை அதிமுகவுக்கு ஆதரவாக முழு 5 ஆண்டுகாலம் விஸ்வாசமாக இருப்பேன்' என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென தமிழக முதல்வருக்கு தனது விஸ்வாசத்தை கருணாஸ் காட்டியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.