close
Choose your channels

இதுதான் பரதநாட்டிய கலைஞர் உடையா? நடிகை கஸ்தூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

Friday, March 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பரதநாட்டிய நடனம் என்பது ஒரு பாரம்பரிய கலாச்சார நடனம் என்பதும் அந்த நடன கலைஞர்கள் அணியும் உடையே மரியாதைக்குரிய வகையில் இருக்கும் என்பதும் பரதநாட்டிய நடன கலைஞர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பதும் தெரிந்தது.

ஆனால் நடிகை கஸ்தூரி சற்று முன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பரத நாட்டியமாடும் பெண் ஒருவர் கிட்டத்தட்ட உள்ளாடை மட்டுமே அணிந்து ஆடும் வீடியோ பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

ஒரு பாரம்பரிய கலாச்சார நடனமான பரதநாட்டியம் நடனம் ஆடும் போது அணியும் உடையா இது? என்று இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் காட்டமாக பதிவாகி வருகிறது. ஜிம் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை பதிவு செய்த நடிகை கஸ்தூரி ’மெட்ராஸ் மியூசிக் அகடாமி இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பாரம்பரிய நடனத்தை அசிங்கப்படுத்தும் வகையில் ஆபாசமான உடை அணிந்து நடனமாடியதற்கு மெட்ராஸ் மியூசிக் அகாடமி தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.