close
Choose your channels

'ஓவியா' பட டிசரை வெளியிட்ட கே.பாக்யராஜ்

Thursday, January 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் கே.பாக்யராஜ் விரைவில் வெளிவரவுள்ள த்ரில் திரைப்படமான 'ஓவியா' என்ற படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

கஜன் சண்முகநாதன் இயக்கிய 'ஓவியா' திரைப்படம் பெற்றோர்கள் சரியாக கவனிக்காததால் உயிரை இழந்த ஒரு சிறுமி, பெற்றோரை பழிவாங்கும் கதை என்று கூறப்படுகிறது. தற்கால பெற்றோர்கள் வேலை பிசியின் காரணமாக குழந்தைகளை கவனிக்காமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விளக்குவதால் இந்த படம் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

கஜன் காண்டீபன் என்பவர் நடித்து தயாரித்துள்ள இந்த த்ரில் படத்தில் பிரபல இலங்கை நடிகை மிதுனா தமிழில் அறிமுகமாகியுள்ளார். பத்மாஜன் இசையமைக்கும் இந்த படத்திற்கு அனிஸ் ரஹ்மான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசரை சமீபத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.