close
Choose your channels

ஆரவ்வின் 'ராஜபீமா' படத்தில் ஓவியாவின் கேரக்டர் இதுதான்!

Thursday, January 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் நடித்து வரும் 'ராஜபீமா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஓவியா நடித்து வருகிறார் என்பதும், இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் ஓவியாவின் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஓவியா, நடிகையாகவே நடித்துள்ளாராம். படத்தின் கதைப்படி ஓவியாவின் தீவிர ரசிகர் ஆரவ், என்றும், ஓவியா தான் நடித்த படம் ஓடும் தியேட்டருக்கு வருகை தருவது போன்றும், அப்போது ஓவியாவை பார்க்கும் ஆரவ் கனவில் டூயட் பாடுவது போன்ற காட்சி இந்த படத்தில் உள்ளதாம்

மேலும் பாடல் மட்டுமின்றி ஒருசில காட்சிகளிலும் ஓவியா நடிகையாகவே இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

நரேஷ் சம்பத் இயக்கத்தில் எஸ்.மோகன் தயாரிக்கும் இந்த படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக ஆஷிமா என்ற நடிகை நடித்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.