close
Choose your channels

மனதை கொள்ளையடிக்கும் கீர்த்தி சுரேஷின் அழகு.. பெஸ்ட் போட்டோஷூட்..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை கொள்ளை அடிக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பதும் அவர் தற்போது தமிழில் ’மாமன்னன்’ ’ரகு தாத்தா’ ’சைரன்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் தெலுங்கிலும் ’போலோ சங்கர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் பக்கத்திற்கு 15 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் கொள்ளை அழகுடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு புகைப்படம் நன்றாக இருந்தால் பரவாயில்லை எல்லா புகைப்படம் சூப்பராக இருக்கிறது என்றும், கீர்த்தி சுரேஷின் பெஸ்ட் போட்டோஷூட் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 7 லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.