close
Choose your channels

கே.எஸ்.ரவிகுமார் அடுத்த படத்தில் நாயகனாக அறிமுகமாகும் அஜித் விஜய் பட இயக்குனரின் மகன்!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவான கூகுள் குட்டப்பா’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவருடைய அடுத்த படத்தில் அஜித், விஜய் இயக்குனரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் இருப்பதாக கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய டிரைலர் ரிலீஸ் விழாவில் கேஎஸ் ரவிக்குமார் பேசியபோது, ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதில் தனது குருநாதர் விக்ரமனின் மகன் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்றும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறினார்.

கே எஸ் ரவிக்குமாரின் குருநாதரான இயக்குனர் விக்ரமன், விஜய் நடித்த ’பூவே உனக்காக’ அஜித் நடித்த ’உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.