close
Choose your channels

முதன்முதலாக கே.வி.ஆனந்துடன் இணையும் இரண்டு பிரபலங்கள்

Monday, March 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கே.வி.ஆனந்த் இயக்கிய 'அனேகன்', ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 'வை ராஜா வை', மற்றும் ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' என ஹாட்ரிக் வெற்றி படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது தங்கள் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் 18வது படமான அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாகவும் மற்றொரு முக்கிய வேடத்தில் டி.ராஜேந்தரும் நடிக்கவுள்ளனர். முதன்முதலாக கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் என இரண்டு பிரபலங்கள் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் நாயகி மற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனமும், தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளதோடு வெற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கே.வி. ஆனந்த்தின் மற்ற படங்களை போலவே இரட்டை எழுத்தாளர்கள் சுபாவும் இந்த படத்தில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.