close
Choose your channels

ரஜினியுடன் லெஜண்ட் சரவணன்: வைரல் புகைப்படங்கள்!

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து ’மறக்க முடியாத நினைவுகள்’ என பதிவு செய்திருப்பதை அடுத்து இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன

பிரபல தொழிலதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த படம் குடும்ப ஆடியன்ஸ்களை கவர்ந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லெஜண்ட் சரவணன் அவ்வப்போது பதிவு செய்யும் ட்வீட்டுகள் வைரலாகி வருகின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து ’மறக்க முடியாத நினைவுகள்’ என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் லெஜண்ட் சரவணன் நடிகர் விவேக்குடன் எடுத்த புகைப்படங்களை இதேபோல் பதிவு செய்து ’மறக்க முடியாத நினைவுகள்’ என குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.