close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் பிரபலத்தின் வாரிசு அறிமுகம்

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டின் வெற்றிப்பட நாயகனாக விளங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'மாமனிதன்'. தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடநது வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் லியோனி அவர்களின் மகன் லியோ சிவகுமார் முக்கிய கேரக்டர் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார். இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில், 'மாமனிதன்' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் தம்பி லியோ சிவக்குமார், திறன்மிகு கலைஞர். இவர் நாடறிந்த பேச்சாளர் திரு.லியோனி அவர்களின் புதல்வர். முறைப்படி எங்கள் நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிக்கின்றார்' என்று கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் ஷாஜிசென் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், அவரது இரண்டு புதல்வர்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.