close
Choose your channels

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்த மலேசிய நடிகர்.. செம போஸ்டர்

Sunday, January 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்ததாக வெளியான செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மலேசிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.

விஷால் நடித்த ’லத்தி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய ஹிட்டான நிலையில் தற்போது அவர் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷால் உடன் எஸ்ஜே சூர்யா, ரிதுவர்மா, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரபல மலேசிய நடிகர் டிஎஸ்ஜி என்பவர் தங்கராஜ் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும். அவருடைய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் நிழல்கள், ரவி ஒய் ஜி மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.