close
Choose your channels

தளபதி 'மெர்சல்' செய்த மேலும் ஒரு சாதனை

Thursday, November 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்த 'மெர்சல்' திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பின்னரும் சந்தித்து சாதனை வசூல் பெற்று இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படம் தெலுங்கில் வெளியாகி அங்கும் வெற்றிநடை போட்டு வருகிறது.'

இந்த நிலையில் வசூலில் சாதனை மேல் சாதனை புரிந்து வரும் 'மெர்சல்' தற்போது இந்திய அளவில் மேலும் ஒரு சாதனையை பெற்றுள்ளது. அதாவது இந்திய அளவில் இதுவரை அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படம் 'கபாலி' என்று இருந்த நிலையில் தற்போது 'மெர்சல்' திரைப்படம் நம்பன் ஒன் இடத்தை பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தின் டீசர் யூடியூப் இணையதளத்தில் இதுவரை 3,45,82,666 பேர் பார்த்துள்ள நிலையில் மெர்சல் பட டீசரை அதே யூடியூப் தளத்தில் 3,46,08,716 பேர் பார்த்துள்ளனர். இதனால் இந்திய அளவில் தற்போது 'மெர்சல்' திரைப்படம் அதிக பார்வையாளர்களை கொண்ட டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.