close
Choose your channels

நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

Monday, December 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை விஜய்விக்ரம் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள நடிகை அம்பிகா இந்த படத்தின் மூலம் தனது நீண்டநாள் கனவு நனவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட
படங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் , செண்டிமெண்டோடு கலந்த  நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில்  நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக,  கனவாக இருந்து கொண்டிருந்தது  . 'டிராபிக்ராமசாமி' என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.

'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில்  ஒரு வக்கீல்  வேடத்தில் நடித்தேன். அதை  எஸ் .ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது
ஆண்டுகள் கழித்து அவர்  நடிக்கும் 'டிராபிக் ராமசாமி' என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது  கதையோடு கலந்த
நகைச்சுவை பாத்திரம்  . எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு  அனுபவமாக  இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது. அந்தப் பாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து இருக்கிறேன்' என்று அம்பிகா கூறியிருக்கிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.