close
Choose your channels

'எஸ்.கே 16' படத்தில் இணைந்த இரண்டு ஹீரோக்கள்!

Tuesday, May 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'எஸ்கே 16' திரைப்படத்தின் தகவல்கள் நேற்றும் இன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே

அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் நட்டி நட்ராஜ் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இருவரும் தனித்தனியே ஹீரோவாக நடித்து புகழ்பெற்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி ஆகியோர் ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கவுள்ளனர் என்பதையும், இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.