close
Choose your channels

நயன் - விக்கியின் ரொமாண்டிக் டாப் ஆங்கிள் புகைப்படம் வைரல்!

Friday, November 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதலித்து தொடங்கினார்கள் என்றும் இவர்களது ஐந்து வருட காதல் இவ்வருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் காதல் ஜோடிகளாக இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கு சுற்றி வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் ஜோடியின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடி கோவாவுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவனின் டாப் ஆங்கிள் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வீட்டில் எடுக்கப்பட்டது போல் தெரியும் இந்த புகைப்படத்தில் இருவரும் கருப்பு நிற உடை அணிந்து இருவரும் நெருக்கமாக நின்று கொண்டு சென்று கொண்டிருப்பது போல் போஸ் கொடுத்துள்ளனர். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை நயன்தாரா ரசிகர்கள் ரசித்து வருவதோடு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, நெற்றிக்கண் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த ஆகிய படங்களில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.