close
Choose your channels

லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குபவர் வடிவேலு பட இயக்குனரா?

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போதும் அவர்தான் தமிழ் திரை உலகின் நம்பர்-1 நடிகை என்பதும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் ’அண்ணாத்த’ ’காற்றுவாக்கில் இரண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இது தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வடிவேலு நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’எலி’ என்ற திரைப்படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாக உள்ள முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அவரது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் இந்தப் படமும் அதே போன்ற ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.