close
Choose your channels

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்: ஒரு முன்னோட்டம்

Thursday, August 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கோலமாவு கோகிலா' சூப்பர் ஹிட்டாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்த வார வெள்ளியன்று அவர் நடித்த இன்னொரு படமான 'இமைக்கா நொடிகள்' வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயகுமார் படம் குறித்து கூறியபோது, 'சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் சினிமாவை தயாரித்ததற்காக் பெருமைப்படுவதாக கூறியுள்ளார். இந்த படம் ஆங்கில படங்களுக்கு இணையாக வரவேண்டும் என்று நாங்கள் கருதியதால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படவில்லை. என்றும், இந்த படத்தை பார்க்கும் ஆடியன்ஸ்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிபிஐ அதிகாரியாக நயன்தாராவுக்கும், சைக்கோ கொலைகாரனாக அனுராக் காஷ்யப்புக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை. நயன்தாராவின் சகோதரராக அதர்வாவும், அவருக்கு ஜோடியாக ராஷிகண்ணாவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். நயன்தாராவின் வித்தியாசமான சீரியஸான நடிப்பு, அவருக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி, ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை ஆகியவை இந்த படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஸ்டண்ட் இயக்குனர் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் உழைப்பு ஏற்கனவே டிரைலரில் தெரிந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 170 நிமிடங்களாக இருந்தாலும் தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லை என்றும் படம் முழுவதும் விறுவிறுப்பான ஒரு ரேஸ் த்ரில்லர் படமாக அமைந்திருப்பதால் படத்தின் நீளத்தை ரசிகர்கள் ஒரு குறையாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

'டிமாண்டி காலனி' என்ற வித்தியாசமான த்ரில் படத்தை கொடுத்த இயக்குனர் அஜய்ஞானமுத்து நிச்சயம் இந்த படத்திலும் நமக்கு ஆச்சரியத்தை வைத்திருப்பார் என்று நம்புவோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.