close
Choose your channels

கார்த்திக் நரேனின் அடுத்த படத்தின் நாயகியாகும் 'தர்பார்' நடிகை

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நிவேதா பேத்ராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியானது தெரிந்ததே.

இந்த நிலையில் 'துருவங்கள் 16', 'நரகாசுரன்' படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க நிவேதா பேத்ராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிவேதா பேத்ராஜ் நடிக்கும் 'தர்பார்' மற்றும் கார்த்தி நரேன் இயக்கும் படம் ஆகிய இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.