close
Choose your channels

விவேக்கை அடுத்து 'தளபதி 63; படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகர்

Monday, November 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 63 திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகி சமூக இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது தெரிந்ததே. விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் வழக்கம்போல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தளபதி 63' படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யுடன் நடிகர் விவேக் இணையும் செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபுவும் 'தளபதி 63' படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே 'சர்கார்' படத்தில் விஜய்யுடன் யோகிபாபு நடித்த ஒருசில காட்சிகளுக்கே பெரும் வரவேற்பு இருந்த நிலையில் 'தளபதி 63' படத்தில் விஜய்யுடன் அவர் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.