close
Choose your channels

கஷ்டங்களை மட்டுமே பார்த்தவர்கள் அம்மா-அப்பா: புகழின் நெகிழ்ச்சியான பதிவு!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளில் மூலம் வேற லெவலில் பிரபலமானவர் புகழ் என்பது தெரிந்ததே. இந்த பிரபலத்தின் காரணமாக அவருக்கு சுமார் பத்து படங்களில் கிடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் அதில் ஒன்று அஜித்தின் ‘வலிமை’ என்பதும், தற்போது அவர் தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக மாறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் பிஸியாக இருந்தாலும் அவர் தனது பழைய வாழ்க்கையை என்றும் மறக்காமல் அவ்வபோது தான் பட்ட கஷ்டங்களை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது அம்மாவின் பிறந்த நாளை புகழ் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் அம்மாவுக்கு அப்பா கேக் ஊட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ள புகழ், ’அப்பா அம்மா முகத்தில் சிரிப்பை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், கஷ்டங்களை மட்டுமே பார்த்தவர்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து புகழின் அம்மாவுக்கு அவருடைய ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மேலும் புகழ் பதிவு செய்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.