close
Choose your channels

அஜித் படத்தை இயக்குவது உண்மையா? 'விக்ரம் வேதா' இயக்குனர்கள் விளக்கம்

Wednesday, November 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிக்கும் 58வது படத்தை இயக்குனர் சிவா இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க காத்திருக்கும் இயக்குனர்கள் பட்டியலில் 'விக்ரம் வேதா' இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரியின் பெயரும் உள்ளது என்பது போன்ற செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது புஷ்கர் - காயத்ரி விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: விக்ரம் வேதா படத்தை அடுத்து, அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறோம். கதை இறுதி செய்யப்பட்டவுடன் தான் கதைக்கான நாயகர்களை தேடும் வழக்கம் எங்களுக்கு உண்டு. எனவே இன்னும் கதையே தயாராகாத நிலையில் அதில் அஜித் நடிப்பதாக வெளிவந்துள்ள தகவலில் உண்மையில்லை. இப்படியெல்லாம் எப்படி வதந்தி பரவுகிறது என்றே தெரியவில்லை' என்று கூறினர்

தல அஜித் நடிக்கும் 58வது படத்தை புஷ்கர் - காயத்ரி இயக்காவிட்டாலும் நிச்சயம் வெகுவிரைவில் அஜித் படத்தை இந்த தம்பதி இயக்குனர்கள் இயக்குவார்கள் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.