close
Choose your channels

'மிஸ்டர் லோக்கல்' படத்தை முடித்து கொடுத்த ராதிகா!

Tuesday, March 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அம்மா கேரக்டரில் நடித்துள்ள நடிகை ராதிகா, தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை இன்று முடித்து கொடுத்துள்ளார். இந்த தகவலை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, இந்த படத்தில் நடித்தது ஜாலியான ஒரு பயணம் போல் இருந்ததாகவும், இதற்கான வாய்ப்பை கொடுத்த இயக்குனர் ராஜேஷூக்கு நன்றி என்றும் பதிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.