close
Choose your channels

'அண்ணாத்த' ரஜினியை சந்தித்த லெஜண்ட் சரவணன்! வைரல் புகைப்படம்

Wednesday, March 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்து வரும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதே ஸ்டூடியோவில் சரவணா ஸ்டோர் சரவணன் அருள் நடித்துவரும் பிரமாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள். இந்த படத்தின் பாடல் காட்சியும் இதே ஸ்டூடியோவில் நடந்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் சரவணன் அருள் ஆகிய இருவரும் ஒரே ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை அடுத்து இருவரும் நேற்று சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் தங்களது பாடங்கள் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.