close
Choose your channels

சூப்பர் ஸ்டாரின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது ?

Monday, August 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை தவிடுபொடியாக்கி வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஓய்வெடுத்தபோதிலும், ரஜினி இடம்பெறாத காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் இந்த படத்தின் டீசர் எடிட்டிங் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், மிகவிரைவில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. எனவே ரஜினி ரசிகர்களுக்கு 'கபாலி'யை அடுத்து இன்னொரு மாபெரும் விருந்து மிக விரைவில் காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.