close
Choose your channels

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த்?

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டாரை சந்தித்து வெற்றிமாறன் கதை கூறியதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால் மிக விரைவில் இந்த படத்திற்கு அவர் பச்சைக்கொடி காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' படத்தின் முதல் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூன்று பாகங்களையும் முடித்த பின்னர் ரஜினி படத்தை இயக்குவாரா? அல்லது முதல் பாகம் முடிந்த பின்னர் ரஜினி படத்தை தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.