close
Choose your channels

'கபாலி' படத்தின் டீசர், இசைவெளியீட்டு தேதிகள் குறித்த விபரங்கள்

Monday, March 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விரைவில் இந்த படத்தின் டீசர் மார்ச் இறுதியில் வெளிவரும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர், இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதிகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

'கபாலி' படத்தின் டீசர் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரமும், இரண்டாவது வாரத்தில் இசை வெளியீட்டு விழாவும், மே இறுதியில் அல்லது ஜூன் ஆரம்பத்தில் பட ரிலீஸும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்னை, மலேசியா, தாய்லாந்து, கோவா ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் இவ்வருடத்தின் மிக எதிர்பார்ப்புள்ள படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.