close
Choose your channels

இயக்குனராக அறிமுகமாகும் ரஜினி பட நடிகர்: படப்பிடிப்பு இன்று ஆரம்பம்!

Sunday, April 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படமான ’பாட்ஷா’ திரைப்படத்தில் அவருடைய நண்பராக அன்வர் பாட்ஷா என்ற கேரக்டரில் நடித்தவர் சரண்ராஜ் என்பது தெரிந்ததே. இவர் ரஜினியுடன் பணக்காரன், தர்மதுரை, பாண்டியன் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சரண்ராஜ் தற்போது முதன் முதலாக ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். தேவ்சரண்ராஜ் மற்றும் சுஷ்மிதா சுரேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தை சோனி ஸ்ரீ புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.