close
Choose your channels

இலவசங்கள் குறித்து 'சர்கார்' படத்திற்கு எதிரான கருத்தை கூறிய ரஜினி

Tuesday, November 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் சமீபத்தில் வெளியானபோது இந்த படத்தில் 'இலவசங்களை கொடுத்து மக்களை அரசியல்வாதிகள் சீரழித்து கொண்டிருக்கின்றனர் என்ற கருத்தை ஆளும் கட்சி கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதும், அதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்த அரசு கொடுத்த இலவச பொருட்களை தூக்கி எறிந்ததும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்றைய பேட்டியின்போது இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'இலவசங்கள் கண்டிப்பாக தேவை. ஆனால் அதே நேரத்தில் தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும்போது இலவசங்கள் கொடுக்க வேண்டும் என்றும் ஓட்டுக்காக இலவசங்கள் கொடுத்தால் அது தவறு என்றும் கூறினார்.

'சர்கார்' படத்தில் எந்த இலவசமும் வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த் 'இலவசங்கள் 100% தேவை என்று கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.