close
Choose your channels

லேட்டா வந்தாலும் ஹிட் அடிக்கணும்: 2.0 டிரைலர் விழாவில் ரஜினிகாந்த்

Saturday, November 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அதேபோல் 2.0 திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அடுத்த தீபாவளியும் வந்துவிட்டது. இந்த இரண்டுக்கும் சேர்த்து ஒரே பதிலாக 'லேட்டா வந்தாலும் ஹிட் அடிக்கனும்' என்று இன்று சென்னையில் நடைபெற்ற '2.0' டிரைலர் விழாவில் ரஜினிகாந்த் பேசினார். அதன்பின்னர் 'நான் படத்தை மட்டுமே கூறினேன்' என்றும் அதற்கு விளக்கமளித்தார்

ஷங்கர் முதலில் தமிழகம் முழுவதும் பிரபலமான இயக்குனராக இருந்தார். அதன்பின்னர் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். இந்த படத்திற்கு பின் அவர் உலகப்புகழ் அடைவது உறுதி என்று கூறிய ரஜினிகாந்த், 'இந்த படத்திற்கு சுமார் ரூ.600 கோடி சுபாஷ்கரன் முதலீடு செய்துள்ளார் என்றால் அது ரஜினிகாந்தை நம்பி இல்லை என்றும் ஷங்கரின் மன உறுதியை அவர் நம்பியே முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தனக்கு உடல்நலம் சரியில்லாததால் இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்ததாகவும் ஆனால் ஷங்கர் தன்னை விடவில்லை என்றும் ரஜினிகாந்த் மேலும் கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.