close
Choose your channels

தாத்தாவாக புரமோஷன் ஆன பிரபல இயக்குனர்

Tuesday, February 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தாத்தாவாக பிரமோஷன் ஆகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் எந்தவித அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை என்றாலும், பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ராம்கோபால் வர்மாவுக்கு வாழ்த்துக்கள்’ கூறியதிலிருந்து அவர் தாத்தாவாகியுள்ளது உறுதி செய்துவிட்டது.

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் ஒரே மகள் ரேவதிக்கும் டாக்டர் ப்ரனவ் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் ரேவதி வர்மா கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்திகள் வெளியான ஒரு சில நிமிடங்களில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்கள், இயக்குனர் ராம்கோபால் வர்மா தாத்தாவாக பிரமோஷன் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.