close
Choose your channels

ரஜினி - அஜித் படங்களுடன் மோதும் ஆர்.ஜே. பாலாஜி 

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வரும் பொங்கல் திருநாளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கே தியேட்டர் போதுமா? என்பது கேள்விக்குறியே

இந்த நிலையில் ஆர்.ஜே. பாலாஜி முதன்முதலில் ஹீரோவாக நடித்து வரும் 'எல்.கே.ஜி.' என்ற திரைப்படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 'விஸ்வாசமான நம்ம பேட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி' என்றும், 'இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்ரோம்' என்று இந்த படத்தின் புதிய போஸ்ட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்ட்டரில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மிக்ஸி, கிரைண்டர், டிவி, உள்பட இலவச பொருட்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆர்.ஜே. பாலாஜி , பிரியா ஆனந்த் , நாஞ்சில் சம்பத், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, "மேயாத மான்" படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.