close
Choose your channels

விஜய்-ஷாருக்கான் இணையும் ரூ.900 கோடி பட்ஜெட் படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மற்றும் ஷாருக்கான் இணையும் படம் ரூ.900 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதேபோல் ஷாருக்கான் நடித்த ’பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.700 கோடி வசூல் ஆனதாக தெரிகிறது.

இந்த நிலையில் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்தால் அந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த முயற்சியை இரண்டு பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.900 கோடி பட்ஜெட்டில் விஜய் மற்றும் ஷாருக்கான் நடிக்கும் அண்டர் வாட்டர் விஞ்ஞான கதை படமாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷங்கர் தற்போது ’இந்தியன் 2’ மற்றும் ’ஆர்சி 15’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேபோல் விஜய் தற்போது ’லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் தற்போது ’ஜவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மூவரும் தற்போது தாங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் படங்களை முடித்தவுடன் இந்த படம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு படம் உருவானால் இந்திய திரையுலகில் மட்டும் இன்றி உலக திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் வசூலில் சாதனை செய்யும் படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos