close
Choose your channels

ஒரே மாத இடைவெளியில் ஹாட்ரிக் அடிப்பாரா சமந்தா?

Thursday, April 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவதோடு இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இளையதளபதி விஜய்யுடன் சமந்தா நடித்த 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் ஒரு சிறு இடைவெளியில் அதாவது ஏப்ரல் 29-ல் சூர்யாவுடன் சமந்தா நடித்த '24' ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மகேஷ்பாபுவுடன் சமந்தா நடித்த 'பிரம்மோத்சவம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஏப்ரல் 14 முதல் மே 6 வரையிலான காலகட்டத்திற்குள் மூன்று முன்னணி நடிகர்களுடன் சமந்தா நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்த மூன்று படங்களும் வெற்றி பெற்று சமந்தா ஹாட்ரிக் அடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.